எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் சிறப்பாக செயல்படவில்லை - சரத்குமார் விமர்சனம்
பதிவு: ஜூலை 01, 2018, 03:24 PM
எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் சிறப்பாக செயல்படவில்லை



சென்னையில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய, அக்கட்சித்தலைவர் சரத்குமார், மக்களின் கருத்தை கேட்டு அரசு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் என தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் சிறப்பாக செயல்படவில்லை என்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் புகார் தெரிவித்தார்.