நீதிபதிகளுக்கு மறைமுக அழுத்தம் தரப்படுகிறது - ப.சிதம்பரம்

தீர்ப்பு வழங்கப்படுவதில் கால தாமதம் ஏற்பட நீதிபதிகளுக்கு தரப்படும் மறைமுக அழுத்தமே காரணம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-06-30 04:39 GMT
புதுக்கோட்டையில்,  வழக்கறிஞர் சங்கம் சார்பில் சட்ட கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக, மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார். 

அப்போது பேசிய சிதம்பரம், நீதிமன்றங்களில் காலியாகவுள்ள
நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பாமல்,  மத்திய அரசு நீதித்தறையை பலவீனப்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார். 

அரசைக் கண்காணிக்க கூடிய அதிகாரம் நீதித்துறைக்கு மட்டுமே உள்ள நிலையில், நீதிபதிகளுக்கு, அரசால் அச்சுறுத்தல் விடப்படுவதாகவும், நீதிமன்ற செயல்பாடுகள் முடக்கப்படுவதாகவும் சிதம்பரம் விமர்சித்தார்.

மேலும், கொலிஜியம் முறையைக் கைவிட்டு, இந்திய நீதித்துறை வகுத்த விதிகளின் அடிப்படையில், நீதிபதிகளை நேரடியாக தேர்வு செய்ய வேண்டுமென வலியுறுத்திய சிதம்பரம்,  நீதிபதிகளை பாதுகாத்து, சுதந்திரமாக செயல்பட வைக்கும் பொறுப்பு வழக்கறிஞர்களுக்கும் உண்டு என வலியுறுத்தினார்.

மேலும், தீர்ப்பு வழங்கப்படுவதில் கால தாமதம் ஏற்பட நீதிபதிகளுக்கு தரப்படும் மறைமுக அழுத்தமே காரணம் எனவும் சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்