பசுமை வழி சாலை அமைக்கும் விவகாரம் :"நிலம், மரம் என ஒவ்வொன்றுக்கும் இழப்பீடு வழங்கப்படும்" - மாவட்ட ஆட்சியர் ரோஹிணி

பசுமை வழி சாலை அமைக்கும் விவகாரம் : "விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை" - மாவட்ட ஆட்சியர் ரோஹிணி

Update: 2018-06-22 09:23 GMT
சேலம் மாவட்டத்தில் பசுமை வழிச்சாலை அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி விளக்கம் அளித்தார்.  அப்போது பேசிய அவர்,  விவசாயிகளின் நிலத்திற்கு மட்டுமின்றி அவர்களின் கிணறு, மாட்டுக் கொட்டகை போன்றவைகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றார். நிலம் எந்த பகுதியில் உள்ளதோ அதற்கு ஏற்றார் போல 3 மடங்கு இழப்பீடு வழங்க உள்ளதாகவும், இதற்காக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். தென்னை, பாக்கு உள்ளிட்ட மரங்களுக்கும் மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கு ஏற்றார் போல இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்