அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகம் திறப்பு
பதிவு: ஜூன் 03, 2018, 06:46 PM
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. சென்னை அசோக் நகர் காவல் பயிற்சி கல்லூரி அருகே கட்சியின் தலைமை அலுவலகத்தை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரும் ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினருமான  தினகரன் இன்று திறந்து வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.