திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு

Update: 2024-04-23 06:09 GMT

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 300 ரூபாய்க்கான சிறப்பு தரிசன சேவைக்கு முன்பதிவு செய்ய, தேவஸ்தான இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ள பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இலவச தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் ஒரு நாளுக்கு முன்பாக கீழ் திருப்பதியில் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீனிவாசம் காம்ப்ளக்ஸ், ரயில் நிலையம் அருகே உள்ள விஷ்ணு நிவாசம் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட இடங்களில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்