நள்ளிரவில் குலுங்கிய நாடு... மண்ணுக்குள் புதைந்த 140 பேர் | Nepal Earthquake

Update: 2023-11-04 09:14 GMT

நேபாளத்தில் நேற்றிரவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவானது. இதில் பல கட்டிடங்கள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கினர். நேபாளத்தின் மேற்கு ருகும், ஜஜர்கோட் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பலி எண்ணிக்கை 140ஆக உயர்ந்துள்ளதாக நேபாள போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்