"பயமுறுத்திய பாஜகவினர்... மிரட்டும் திரிணாமூல்.."சந்தேஷ்காலி வன்கொடுமை...பெண்கள் பகீர் புகார்

Update: 2024-05-10 16:34 GMT

மேற்குவங்கம் மாநிலம் சந்தேஷ்காலியில் பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் தலைமை தேர்தல் ஆணையருக்கு பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

சந்தேஷ்காலியில் திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகியான ஷாஜகான் ஷேக் உள்ளிட்டோரால், பட்டியலின பெண்கள் பாலியல் வன்கொடுமை ஆளானதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேற்கு வங்க அரசியலில் புயலை கிளப்பிய இந்த சம்பவத்தில், இரண்டு பெண்கள் தங்கள் புகார்களை திரும்பப் பெற்றதோடு, புகார் தொடர்பாக பாஜகவினர் மீது குற்றம்சாட்டினர். இந்த சூழலில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு, தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி ரேகா ஷர்மா, கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகிகளின் வற்புறுத்தலால் பெண்கள் புகார்களை திரும்பப் பெறுவது தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக பெண்கள் பலர் தங்களிடம் புகார்களை முன் வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகிகளின் மிரட்டலால், பெண்கள் புகார்களை திரும்பப் பெறாமல் இருப்பதை உறுதி செய்யவும், உரிய நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்