Wanted குற்றவாளியை பிடிக்க உயிரை பணயம் வைத்த போலீஸ் - நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்
பெங்களூருவை சேர்ந்த மஞ்சுநாத் என்கிற ஹொட்டே மஞ்சு, பெங்களூரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு மோசடி வழக்குகளில் ஈடுபட்டிருந்தார். அவர் கடந்த 5-ம் தேதி தும்கூர் பகுதியில் சுற்றித்திரிந்ததை அறிந்த காவலர் தொண்டலிங்கையா, அவரை பிடிக்க பின்தொடர்ந்து சென்றார். அப்போது மஞ்சுநாத் இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்றார். ஆனால் தொண்டலிங்கயா, அவரது இருசக்கர வாகனத்தை பிடித்தவாறு தடுத்து நிறுத்த முயன்றார். எனினும் தொடர்ந்து வாகனத்தை இயக்கியதால் தொண்டலிங்கய்யா, சாலையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார், தொண்டலிங்கய்யாவுக்கு உதவினர். இதையடுத்து மஞ்சுநாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். குற்றவாளியை பிடிக்க காவலர் தனது உயிரையே பணயம் வைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள், சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.