கண்ணை மறைத்த காமவெறி... துடிதுடித்து பலியான தாய், தந்தை... மகன் ரூபத்தில் வந்த எமன் - அதிர வைக்கும் கொடூரம்

Update: 2023-08-29 02:45 GMT

கைம்பெண்ணிடம் நெருக்கமாக இருப்பதற்காக மகனே, தாய், தந்தைக்கு உணவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம், கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.

கர்நாடகாவின் பிசிலஹள்ளி சேர்ந்த நஞ்சுண்டப்பாவும் அவரது மனைவியும் வாயில் நுரை தள்ளிய நிலையில் சடலமாக கிடந்தனர். இதனையடுத்து இருவரும் தற்கொலை செய்துகொண்டதாக கூறிய அவர்களது மகன் மஞ்சுநாத், பெற்றோரின் சடலத்தை அவசர அவசரமாக அடக்கம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் மஞ்சுநாத் மீது சந்தேகமடைந்த போலீசார், அவரை கைது செய்து விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மஞ்சுநாத்திற்கு கைம்பெண் ஒருவருடன் தகாத உறவு இருந்து வந்துள்ளது. விவசாயத்தில் இருந்த வந்த வருவாயை அப்பெண்ணிற்காக செலவு செய்த மஞ்சுநாத், வீட்டிலிருந்த நகைகளையும் அப்பெண்ணிடம் தந்துள்ளார். இதனை கண்டித்த பெற்றோர், நகை, பணத்தை திரும்ப வாங்கி வருமாறு கூறியுள்ளனர். இதனால் கைம்பெண்ணிடம் நெருக்கமாக இருக்க முடியாது என கருதிய மஞ்சுநாத், உணவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து, பெற்றோரை கொலை செய்துள்ளார். விசாரணையில் வெளியான தகவல்களையடுத்து, மஞ்சுநாத்தை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்