நேரு ஸ்டேடியத்தில் திடீரென சரிந்து விழுந்த பந்தல்... டெல்லியில் அதிர்ச்சி - 8 பேரின் கதி என்ன..?
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் கேட் எண் 2 அருகே, திருமண விழாவுக்காக தற்காலிகமாக பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த பந்தல் இன்று காலை 11 மணியளவில் திடீரென சரிந்து விழுந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.
இடிபாடுகளில் சிக்கிய 25 முதல் 30 பேர் மீட்கப்பட்டு எய்ம்ஸ் ட்ரௌமா சென்டர் மற்றும் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து நிகழ்ந்த இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் விரைந்தனர். சம்பவத்தின்போது தொழிலாளர்கள் பலர் உணவு அருந்தச் சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழப்பு இல்லை. எனினும், 8 பேர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.