கேரளாவில் கன மழை - வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

கேரளாவில் பெய்த கனமழை காரணமாக ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் 3 வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.;

Update: 2021-10-29 07:36 GMT
கேரளாவில் பெய்த கனமழை காரணமாக ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் 3 வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரள மாநிலம் கொல்லம், புனலூர், தென்மலை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக இடப்பாளையம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், ஆட்டோ உள்ளிட்ட 3 வாகனங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. மேலும்  ஆனக்குன்று இரயில் நிலைய பகுதியில்  மணல் அரிப்பு ஏற்பட்டதன் காரணமாக லேசான நிலச்சரிவு ஏற்பட்டது. புனலூர் தென்மலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளிலும் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்