"அமரீந்தர் சிங் தனிக்கட்சி துவங்க உள்ளார்" - ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரல் அறிவிப்பு
பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தனிக்கட்சி துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.;
பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தனிக்கட்சி துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரல், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பஞ்சாப் மற்றும் அம்மாநில மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வரை தாம் ஓய்வெடுக்க போவதில்லை என்று அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளதாக ரவீன் துக்ரல் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் நல்ல தீர்வு கண்டால் பாஜகவுடன் கூட்டணி வைக்க தயார் எனவும் அமரீந்தர் சிங் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.