பஞ்சாப் புதிய முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி - இன்று காலை 11 மணிக்கு பதவியேற்பு விழா

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜீத் சிங் இன்று காலை 11 மணிக்கு பதவியேற்றுக் கொள்கிறார்.;

Update: 2021-09-20 02:17 GMT
காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இருந்த அம்ரீந்தர் சிங், தமது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, சண்டிகரில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், சட்டமன்ற குழு தலைவராக சரண்ஜீத் சிங் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, சரண்ஜீத் சிங், ஆளுநர் பன்வாரி லால் புரோகித்தை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரி, எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சரண்ஜீத் சிங் சன்னி, இன்று முற்பகல் 11 மணியளவில், பதவியேற்பு விழா நடத்த ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார். இதனிடையே, சரண்ஜீத் சிங் சன்னிக்கு, காங்கிரஸ்  முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர்  பக்கத்தில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் எனவும், மக்களின் நம்பிக்கை முக்கியம் எனவும் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்