"ஆங்கிலம் படித்தாலும் இந்தியில் பேச வேண்டும்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

"ஆங்கிலம் படித்தாலும் இந்தியில் பேச வேண்டும்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு;

Update: 2021-09-14 13:29 GMT
"ஆங்கிலம் படித்தாலும் இந்தியில் பேச வேண்டும்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

டெல்லி, விஞ்ஞான் பவனில் நடைபெற்ற இந்தி மொழி தின கொண்டாட்ட விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், குழந்தைகள் ஆங்கில வழியில் படித்தாலும் வீடுகளில் பெற்றோர்கள் அவர்களுடன் இந்தியில்தான் பேச வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிராந்திய மொழிகளில் மட்டுமல்லாது இந்தியிலும் கருத்துகள் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும், தற்சார்பு என்பது நாட்டின் சிறந்த உற்பத்திக்கானது மட்டுமல்ல மொழிகளுக்குமானது எனவும் அமித்ஷா தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்