மேம்பால தூண்கள் இடிந்து விபத்து - 2 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு

விசாகப்பட்டினம் அருகே கட்டுமான பணியின் போது மேம்பால தூண்கள் இடிந்து விழுந்ததில் 2 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.;

Update: 2021-07-07 06:31 GMT
விசாகப்பட்டினம் அருகே கட்டுமான பணியின் போது மேம்பால தூண்கள் இடிந்து விழுந்ததில்  2 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அனகாபள்ளியில் மேம்பாலம் கட்டும் பணிகள்  நடைபெற்று வருகின்றன. பாலத்தின் தூண்கள் திடீரென இடிந்து சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது சரிந்து விழுந்தன. அவ்வழியே சென்றவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் இரண்டு கார்கள் மற்றும் லாரி  முற்றிலும் நசுங்கின . காரில் இருந்த 2 பேர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  பலர் படுகாயம் அடைந்தனர். இடிபாடுகளை அகற்றி வாகனங்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
Tags:    

மேலும் செய்திகள்