திருநங்கைகளுக்கு கொரோனா கால நிவாரணம் ரூ.1,500 வழங்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு

திருநங்கைகளுக்கு கொரோனா கால நிவாரணமாக ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.;

Update: 2021-05-25 01:52 GMT
திருநங்கைகளுக்கு கொரோனா கால நிவாரணம் ரூ.1,500 வழங்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு

திருநங்கைகளுக்கு கொரோனா கால நிவாரணமாக ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வெளியுட்டுள்ள செய்தி குறிப்பில், கொரோனா காலத்தில் திருநங்கைகள் வாழ்வாதாரத்தை இழந்து, உணவு, மருந்து உள்ளிட்டவை இன்றி தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,.  இதனால் திருநங்கைகளுக்கு உதவும் வகையில் அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய ஏதுவாக  ஆயிரத்து 500 ரூபாய் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,. கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் திருநங்கைகளுக்கு பாரபட்சம் காட்டக்கூடாது என்றும், ஹரியாணா, அசாமில் உள்ளது போல நடமாடும் தடுப்பூசி மைய திட்டத்தை செயல்படுத்த அனைத்து மாநில முதன்மை செயலாளர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்