கேரளாவில் 5 மாவட்டங்களில் ரெட் அலர்ட் - இரவு முதல் தொடர்ந்து கனமழை

கேரளாவின் 5 மாவட்டங்களில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்ட நிலையில், காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது

Update: 2021-05-15 07:37 GMT
கேரளாவின் 5 மாவட்டங்களில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்ட நிலையில், காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது

கண்ணூரில் நேற்றிரவு முதல் கன மழை பெய்து வரும் நிலையில் கடற்கரை மற்றும் மலைப்பகுதியில்  வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மின்சாரம் இல்லை. வயநாட்டில் காற்றுடன்  கன மழை பெய்து வருகிறது.  திருச்சூரில் இரவில் காற்றுடன் கன மழை பெய்த நிலையில், எரியாட், சாவக்காட் மற்றும் கைபா மங்கலம் ஆகிய கடலோரப் பகுதிகள் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்துள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் அவ்வப்போது பலத்த மழை பெய்கிறது. மாவட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள 15 நிவாரண முகாம்களில்  400 க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  பத்தனம் திட்டாவில்  நேற்று இரவு முதல்  மழை குறைந்த நிலையில், அச்சன் கோவில் ஆற்றில் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்