கேரள சட்டப்பேரவை - 109 சட்டம் இயற்றம்; 275 மசோதாக்கள் நிறைவேற்றம்

கேரளா மாநில சட்டமன்றத்தில் நான்கரை ஆண்டுகளில் இது வரை, 109 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.;

Update: 2021-01-24 10:51 GMT
கேரளா மாநில சட்டமன்றத்தில்  நான்கரை ஆண்டுகளில் இது வரை, 109 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இது குறித்து பேசிய கேரள சட்டப்பேரவைத் தலைவா் பி.ஸ்ரீராமகிருஷ்ணன், கடந்த நான்கரை ஆண்டுகளில் இது வரை நடைபெற்ற 22 அமா்வுகளில் 232 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது என்றார். அடுத்து கேரள சட்டப்பேரவைத் தோ்தல் வரும் ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுவதாக கூறினார். 14 - ஆவது சட்டப்பேரவை காலகட்டத்தில் வெவ்வேறான தலைப்புகளின்கீழ் 275 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதகாவும், இதில் 87 அரசு மசோதாக்களும், 22 நிதி ஒதுக்கீட்டு மசோதாக்கள் என 109 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார். உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி திருத்த மசோதா, கேரள சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, கடல் வாரிய மசோதா பெருநகர போக்குவரத்து அதிகார சபை மசோதா, உழவா் நலநிதி மசோதா, மருத்துவ நிறுவன பதிவு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவை என்றும் அவர் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்