"இந்தியாவுக்குள் 300 பயங்கரவாதிகள் ஊடுருவலாம்" - இந்திய ராணுவ அதிகாரி காஷ்மீரில் பேச்சு

குளிர்காலம் தொடங்குவதற்கு முன்னர் எல்லையில் இந்திய பகுதிக்குள் 200 முதல் 300 பயங்கரவாதிகள் வரை ஊடுருவலாம் என இந்திய ராணுவ அதிகாரி எச்சரித்துள்ளார்;

Update: 2020-10-27 05:12 GMT
குளிர்காலம் தொடங்குவதற்கு முன்னர் எல்லையில் இந்திய பகுதிக்குள் 200 முதல் 300 பயங்கரவாதிகள் வரை ஊடுருவலாம் என லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ். ராஜூ எச்சரித்துள்ளார். ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லையில் பாதுகாப்பு படைகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டார். பயங்கரவாத பாதையிலிருந்து விலகும் இளைஞர்களை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம் எனவும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்