பழங்குடி சமூகத்தில் இருந்து முதல் பெண் ஐ.ஏ.எஸ் - உதவி ஆட்சியராக பொறுப்பேற்ற பழங்குடி பெண்

கேரளாவில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உதவி ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Update: 2020-06-13 02:59 GMT
கேரளாவில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உதவி ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த  ஸ்ரீதண்யா சுரேஷ் , பழங்குடி சமூகத்தில் இருந்து முதன் முதலில் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றிருந்தார். 2019 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற அவர், பயிற்சிக்குப் பின்னர், தற்பொழுது கோழிக்கோடு உதவி ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், கொரோனா தொற்று காலத்தில் பொறுப்பேற்றுக் கொள்வதன் மூலம்,  நிர்வாகத் துறையை ஆழமாக கற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார். 2016 ஆம் ஆண்டில்,  பழங்குடியினர் மேம்பாட்டுத் துறையில் ஸ்ரீதாண்யா பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்