8 ஆண்டுகள் செலுத்திய பிரீமியம தொகை : வட்டியுடன் வாடிக்கையாளருக்கு வழங்க எல்.ஐ.சிக்கு உத்தரவு

எல்.ஐ.சி- யின் ஜீவன் சரள் திட்டத்தின் கீழ் எட்டு ஆண்டுகள் செலுத்திய பிரீமியம் தொகையை, 7.5 சதவீத வட்டியுடன் பாலிசிதாரருக்கு வழங்க எல்.ஐ.சி- நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;

Update: 2020-06-03 02:53 GMT
எல்.ஐ.சி- யின் ஜீவன் சரள் திட்டத்தின் கீழ் எட்டு ஆண்டுகள் செலுத்திய பிரீமியம் தொகையை, 7.5 சதவீத வட்டியுடன் பாலிசிதாரருக்கு வழங்க எல்.ஐ.சி- நிறுவனத்துக்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பாலிசியின் முதிர்வு தொகை குறிப்பிட வேண்டிய பகுதி பூர்த்தி செய்யப்படாததால், மனுதாரரும் எல்.ஐ.சி நிறுவனமும் செய்து கொண்ட ஒப்பந்தம் செல்லாது எனக் கூறி,  மனுதாரரிடம் இருந்து வசூலித்த தொகைக்கான பலன்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.மேலும், எட்டு ஆண்டுகளாக பாலிசியில் உள்ள தவறை இரு தரப்பினரும் சரி செய்யாததால், வழக்கை மீண்டும் தீர்ப்பாயத்துக்கு அனுப்புவதால் எந்த பயனும் இல்லை எனத் தெரிவித்த நீதிபதி, மனுதாரர் செலுத்திய தொகைக்கு ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டி கணக்கிட்டு வழங்க எல்.ஐ.சி.க்கு உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்