கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை - நிதி நிலைமை பாதிப்பு என தெலங்கானா அரசு தகவல்

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி தெலங்கானாவில் ஓய்வூதியதாரர்களுக்கு 50 சதவீத பென்சன் மட்டுமே வழங்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.;

Update: 2020-03-31 02:22 GMT
கொரோனா வைரஸ் தடுப்பு  முன்னெச்சரிக்கை நடவடிக்கையால்,  நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி தெலங்கானாவில் ஓய்வூதியதாரர்களுக்கு 50 சதவீத பென்சன் மட்டுமே வழங்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதேபோல் அரசு ஊழியர்கள், பொதுத்துறை மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் , உள்ளாட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு 75 சதவீதம் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் தெலங்கானா அரசு அறிவித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்