கேரளா : நவராத்திரி விழாவிற்கு வந்த யானைகள் - தடுத்து நிறுத்தப்பட்டதால் திடீர் பரபரப்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமி சிலைகள், யானைகள் மீது வைத்து இருமாநில அரசு மரியாதையுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்.

Update: 2019-09-25 05:31 GMT
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமி சிலைகள், யானைகள் மீது வைத்து இருமாநில அரசு மரியாதையுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். இதற்காக கேரள தேவஸ்தானத்திற்கு சொந்தமான சிவகுமார் மற்றும் ஸ்ரீ வல்லபன் என்ற 2 யானைகள், தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டன. இந்நிலையில் தமிழகத்துக்கு யானைகளை கொண்டு செல்வதற்கான உரிய சான்றிதழை வழங்கவில்லை எனக் காரணம் காட்டி, கேரள வனத்துறையினர், தமிழக கேரள எல்லையான பாறசாலை பகுதியில் யானைகளை தடுத்து நிறுத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்