திருமண விழாவில் குத்தாட்டம் போட்டாரா எம்.எல்.ஏ? - போலி வீடியோ என எம்எல்ஏ தரப்பில் புகார்

புதுச்சேரி பாகூர் தொகுதி எம்எல்ஏ திருமண நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்டது போல் போலி வீடியோ வெளியான விவகாரத்தில் அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-09-16 22:39 GMT
பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனவேல் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆடியதாக சமூக வலைதளங்களில் போலி  வீடியோ பரவியது. இந்த வீடியோவுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என தனவேல் விளக்கம் அளித்திருந்தார். இதுதொடர்பாக எம்எல்ஏ தனவேலின் உறவினர் பாகூர் காவல் நிலையத்தில் புகார்  அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலி வீடியோ வெளியிட்ட அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்