ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு - ஜாமின் வழங்கி அகமதாபாத் நீதிமன்றம் உத்தரவு

குஜராத் மாநிலம் அகமதாபாத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்திக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;

Update: 2019-07-12 19:41 GMT
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட போது,  உள்துறை அமைச்சர் அமித்ஷா இயக்குனராக உள்ள, அகமதாபாத் கூட்டுறவு வங்கியில், 750 கோடி ரூபாய், மதிப்பிலான, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள், டெபாசிட்  செய்யப்பட்டதாக, ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இதனையடுத்து, அந்த கூட்டுறவு வங்கி, ராகுல் காந்தி மீது தொடர்ந்த அவதூறு வழக்கில் அவர் நேரில் ஆஜரானார். அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
Tags:    

மேலும் செய்திகள்