இந்தியா கொண்டு வரப்படுகிறார், மல்லையா - நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு

இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில், தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2018-12-11 02:11 GMT
இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில், தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மல்லையாவை இந்தியா அனுப்புவது குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திற்கும் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இந்த உத்தரவின் மூலம், கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்ற  மல்லையா, மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வரப்படுகிறார். மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் அவர் அடைக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. லண்டன் நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு சிபிஐ வரவேற்பு தெரிவித்து உள்ளது.

"வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நகர்வு" - விஜய் மல்லையா அறிவிப்பு

நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு செய்வதற்கு 14 நாட்கள் அவகாசம் உள்ள நிலையில், லண்டனில் செய்தியாளர்களை சந்தித்த விஜய் மல்லையா, தமது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து விட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை  குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் தமது கடன்களை திருப்பி செலுத்த தாம் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்