துப்பாக்கியால் சுட்டு பிறந்தநாள் கொண்டாட்டம் : சிவசேனா கட்சி கவுன்சிலர் மகன் அட்டகாசம்

சிவசேனா கட்சியின் கவுன்சிலர் ஒருவரது மகன் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தனது பிறந்தநாளை கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.;

Update: 2018-11-11 20:22 GMT
மும்பை தானே மாவட்டத்தில் சிவசேனா கட்சியின் கவுன்சிலர் சஞ்சய் பாண்டேயின் மகன் நீல் பாண்டே, தனது பிறந்தநாளை கடந்த 9ஆம் தேதி நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார்.  துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு பிறந்தநாளை கொண்டாடுவது போன்ற வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரவியது. தனது பிறந்தநாள் அன்று நீல் பாண்டே, புனே அருகில் உள்ள மலைப்பகுதி தனியார் ஓட்டலில் நண்பர்களுக்கு விருந்து வைத்துள்ளதாகவும், அப்போது நண்பர் ஒருவர் கொடுத்த கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி அவர் சுட்டதாகவும் தானே போலீசார் நடத்திய விசாரணையில் தெரிவித்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்