ரபேல் ஒப்பந்தம் - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

ரபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Update: 2018-10-31 09:22 GMT
ரபேல் ஒப்பந்த‌த்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. மனு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், ரபேல் விவகாரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் இறுதி செய்த‌து தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு உச்ச நீமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, ரபேல் விவகாரத்தில், சில ரகசிய தகவல்கள் அடங்கி இருப்பதால், முழு தகவல்களை வெளியிடுவதில் சிக்கல் இருப்பதாக மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதனை தொடர்ந்து, வெளியிட முடிந்த தகவல்களை வெளியிடவும், வெளியிட முடியாத தகவல்களுக்கு, தகுந்த காரணங்களை எழுத்துப் பூர்வமாக நீதிமன்றத்தில் சம‌ர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை நீதிபதிகள் நவம்பர் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்