பழங்குடியின மக்கள் 50 சதவீதம் பேர் இன்னும் வறுமையில் உள்ளதாக ஐ.நா. அறிக்கை

நாட்டில் வறுமை 50 சதவீதம் குறைந்துள்ள நிலையிலும், பழங்குடியின மக்கள் 50 சதவீதம் பேர் இன்னும் வறுமையில் உள்ளதாக ஐ.நா. அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

Update: 2018-09-25 10:51 GMT
கடந்த 2005 மற்றும் 2015- க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் இருந்த 27 கோடியே 10 லட்சம் பேர் பொருளாதார ரீதியாக மேம்பாடு அடைந்துள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 10 ஆண்டுகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருந்தவர்களின் சதவீதம் 54 புள்ளி 7 சதவீதத்தில் இருந்து 27 புள்ளி 5 சதவீதமாக குறைந்துள்ளது.வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களில் 19 கோடியே 60 லட்சம் பேர் பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் உள்ளனர்.பீகாரின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் 2 கோடியே 80 லட்சம் பேரும், உத்தரப்பிரதேசத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒரு கோடியே 60 லட்சம் பேரும் வசித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் வறுமையால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதத்தினர் குழந்தைகள் என்பதும், 83 சதவீதம் ஏழைகள் தெற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள சமூகங்களாக இஸ்லாமிய மற்றும் பழங்குடியின மக்கள் கண்டறியப்பட்டு உள்ளனர்.வறுமைக் கோட்டுக்கு கீழ் கடந்த 2005 ஆம் ஆண்டு 80 சதவீதமாக இருந்த பழங்குடியின மக்களின் எண்ணிக்கை 2015-ல் 50 சதவீதமாக உள்ளது. பழங்குடியின மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறையாததும் ஐ.நா. அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்