"ஊட்டச்சத்து, தரமான மருத்துவம் வழங்குவதில் அரசு கவனம்" - பிரதமர் மோடி

நாடு முழுவதும் அங்கன்வாடி பணியாளர்களுடன் பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

Update: 2018-09-11 08:15 GMT
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, பஞ்சாப் உட்பட நாடு முழுவதும் உள்ள கிராம செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர்களிடம் பேசிய மோடி, ஊட்டச்சத்து மற்றும் தரமான மருத்துவம் தொடர்பான விஷயங்களில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டார். நோய்களை தடுப்பதற்கான தடுப்பூசி போடும் திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். புதிதாக பிறந்த குழந்தைளை 'ஆஷா பணியாளர்கள்' எனப்படும் கிராம செவிலியர்கள் கவனிக்கும் காலம் 42 நாளில் இருந்து 15 மாதங்களாக நீட்டிக்கப் பட்டுள்ளதாகவும் அதன்படி, குழந்தைகளை 11 முறை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் மோடி அறிவுறுத்தினார்.  
Tags:    

மேலும் செய்திகள்