மீட்பு பணியின் போது முதுகை படிக்கட்டாக மாற்றிய இளைஞர்...

கேரள வெள்ளத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் போது பெண்கள் படகில் ஏறுவதற்காக இளைஞர் ஒருவர் படகு அருகே குனிந்து தன் முதுகை படிக்கட்டாக மாற்றினார்.;

Update: 2018-08-24 06:37 GMT
கேரள வெள்ளத்தில் சிக்கியிருந்தவர்களை, மீட்கும் போது, பெண்கள் படகில் ஏறுவதற்காக இளைஞர் ஒருவர், படகு அருகே குனிந்து தன் முதுகை படிக்கட்டாக மாற்றினார். பெண்கள் அனைவரும் அவரின் முதுகு மீது ஏறி படகில் அமர்ந்தனர். இளைஞரின் இந்த செயல், பலரின் பாராட்டையும் பெற்றது. சமூக வலைதளங்களிலும் அந்தக் காட்சிகள் வேகமாக பரவின.

இளைஞரை பாராட்டி ஒரு லட்சம் ரூபாய் பரிசு



இந்த இளைஞர் மலப்புரம் மாவட்டம் தானூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜைசல் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த இளைஞரை கண்டுபிடித்த கேரள திரைப்பட இயக்குனர் வினயன், அவருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்