இன்று கார்கில் போர் வெற்றி தினம் : போரில் உயிரிழந்த வீரர்களுக்கு நிர்மலா சீதாராமன் மரியாதை

கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி, போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மரியாதை செலுத்தினார்.

Update: 2018-07-26 05:05 GMT
கடந்த 1999-ஆம் ஆண்டில், இந்தியாவிற்கும்  பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற போரில், இந்தியா வெற்றி பெற்றது. இதையடுத்து ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி, கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. கார்கில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு, டெல்லியில் மரியாதை செலுத்தப்பட்டது. டெல்லி அமர் ஜவான் ஜோதி பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,  மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராணுவ அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்