21 குட்டிகளை ஈன்ற அமெரிக்க பிட்புல்
பதிவு: ஜூன் 23, 2018, 04:26 PM
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமெரிக்க பிட்புல் இன நாய் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்றுள்ளது.  இதில் 4 குட்டிகள் பிறந்த சில மணி நேரத்தில் உயிரிழந்தன. இதற்கு முன்பு இங்கிலாந்தின் மாஸ்டிஃப் என்ற நாய் அறுவை சிகிச்சை மூலம் ஒரே பிரசவத்தில் 24 குட்டிகளை ஈன்றதே கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது. சுக பிரசவத்தில் அதிக குட்டிகள் ஈன்ற சாதனை பட்டியலில் இந்த பிட்புல் இன நாய் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.