இலங்கையில் சிறுத்தைப்புலியை அடித்துக் கொன்ற பொதுமக்கள்
பதிவு: ஜூன் 21, 2018, 06:22 PM
இலங்கை கிளிநொச்சி வனப்பகுதியில் இருந்து இன்று காலை வழி தவறி வந்த சிறுத்தைப்புலி ஒன்று அம்பாள்குளம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றுக்குள் புகுந்தது. அதனை பிடிக்கச் சென்ற வனத்துறை அதிகாரி உட்பட 10 பேரை அது கடித்தது. இதில் படுகாயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் அப்பகுதி மக்கள் சிறுத்தைப்புலியை அடித்துக் கொன்றனர். உயிரிழந்த சிறுத்தையை அப்பகுதி இளைஞர்கள் தூக்கிக் கொண்டு  தங்கள் செல்போன்களில் படமெடுத்தனர்.