மணல் சிற்பம் மூலம் யோகா தின விழிப்புணர்வு
மணல் சிற்பம் மூலம் யோகா தின விழிப்புணர்வு;
ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில், உலக யோகா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் இந்த வடிவமைத்தார். 5 டன் மணலில் 20 அடி நீளம் யோகா சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின், வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் பிரதமர் நரேந்திரமோடி ஆகியோரின் சிற்பங்கள் இடம்பெற்றிருந்தன. கடற்கரைக்கு வந்த பொதுமக்கள், யோகா சிற்பத்தை பார்வையிட்டதோடு, புகைப்படும் எடுத்து சென்றனர்.