தர்ணா போராட்டத்தை கைவிட்டார், அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில், கடந்த ஒரு வாரமாக தர்ணாவில் ஈடுபட்டு வந்த அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளார்.;

Update: 2018-06-20 04:45 GMT
டெல்லியில், ஐஏஎஸ் அதிகாரிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரக் கோரியும், ரேஷன் பொருட்களை நேரடியாக வீட்டுக்கே சென்று வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கக் கோரியும், துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலின் அலுவலகத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 11-ந்தேதி முதல் உள்ளிருப்பு தர்ணா போராட்டம் நடத்தி வந்தார். அவருடன் அமைச்சர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பணிக்கு திரும்பி உள்ள ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு துணை நிலை ஆளுநர்  கடிதம் எழுதினார். இதனை ஏற்றுக் கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் தனது தர்ணா போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்