வீரமரணமடைந்த தந்தை: அதே படைப்பிரிவில் சேர்ந்த மகன்
பதிவு: ஜூன் 12, 2018, 01:56 PM
கடந்த 1999-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் என்ற இடத்தை மீட்கும் முயற்சியில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு போர் மூண்டது. இந்தப் போரில் ராஜ்புதானா ரைபில்ஸ் பிரிவில் 2வது பட்டாலியனாகப் பணியாற்றிய பச்சான் சிங் என்ற ராணுவ வீரர் வீர மரணமடைந்தார். இவரின் மகன் ஹித்தேஷ், தந்தையை போல ராணுவ வீரராக பணியாற்ற வேண்டும் என்பதை கொள்கையாக்கி கொண்டார். இதனை தொடர்ந்து,  டேராடூனில் உள்ள ராணுவ மையத்தில் பயிற்சி பெற்ற ஹித்தேஷ் 19 ஆண்டுகளுக்குப் பிறகு, தந்தை பணியாற்றிய அதே படைப்பிரிவில் பணியில் சேர்ந்தார். முதல் நாள் பணியின் போது தமது தந்தையின் நினைவிடத்திற்கு சென்ற ஹித்தேஷ், அங்குள்ள தனது தந்தையின் சிலைக்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தியது காண்போர் நெஞ்சை உருக வைத்தது.