ரகுமானை ஈர்த்த சென்னை கானா... உச்சகட்ட ட்ரெண்டில் "வாட்டர் பாக்கெட்" | Rayan | A.R.Rahman

Update: 2024-05-26 08:57 GMT

நடிகர் தனுஷ் இயக்கும் "ராயன்" திரைப்படத்தில் "வாட்டர் பாக்கெட்" என்ற பாடலை எழுதிய சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த கானா காதரை நேரில் அழைத்து இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நடிகர் தனுஷ் பாராட்டினர். தனுஷ் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் அவருடன் கலந்துரையாடும் காட்சிகளை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

கேப்டன் மில்லர் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கில் குபேரா மற்றும் இசை அமைப்பாளர் இளையராஜா வாழ்க்கை வரலாற்று படம் என பிஸியாக உள்ள தனுஷ், தனது 50-ஆவது படமாக "ராயன்" படத்தை நடித்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்