ஷங்கருக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி - உத்தரவை எதிர்த்து லைகா நிறுவனம் மனு

இந்தியன்-2 படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க மறுத்த தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து லைக்கா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

Update: 2021-08-07 03:51 GMT
நடிகர் கமல் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படம்  தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க கோரி, லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க மறுத்து, லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து லைகா சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. இந்த மேல் முறையீட்டு மனுவை  தலைமை நீதிபதி அமர்வு ஏற்றுக் கொண்டது. மேலும், லைகா நிறுவனத்தின் வழக்கை, தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்