ஆகஸ்ட் 6ம் தேதி 'நவரசா' வெளியீடு - சூர்யா, விஜய் சேதுபதி நடிப்பில் 'நவரசா'
மனிதர்களின் 9 உணர்வுகளை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள நவரசா என்ற ஆந்தாலஜி திரைப்படம், ஓடிடியில் ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.;
இதில், கௌதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், அரவிந்த் சாமி என 9 இயக்குனர்கள் 9 கதைகளை இயக்கியுள்ளனர். ஒவ்வொரு கதைக்கும் ஏ.ஆர்.ரகுமான், டி.இமான், ஜிப்ரான் என 9 இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இதனிடையே நவரசா ஆந்தாலஜி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.