Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16.12.2025) | 6 PM Headlines | ThanthiTV
- அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கி நடைபெற்று வருகிறது...இளம் வீரர்களை வாங்குவதற்கு ஐ.பி.எல். அணி நிர்வாகங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது...
- ஐ.பி.எல். மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை 25 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது....ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மூன்றாவது வீரர் என்ற பெருமை கேமரூன் கிரீனுக்கு கிடைத்துள்ளது...
- ஐ.பி.எல். மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இளம் வீரர்களை குறிவைத்து அதிக விலைக்கு வாங்கி வருகிறது..ராஜஸ்தானைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் கார்த்திக் சர்மா மற்றும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பிரசாந்த் வீர் ஆகியோரை தலா 14 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு சி.எஸ்.கே. அணி வாங்கியுள்ளது...
- ஐபிஎல் மினி ஏலத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஸ்பின்னர் அஹீல் ஹுசைனை 2 கோடி ரூபாய்க்கு சென்னை அணி ஏலம் எடுத்தது ...நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னை அணியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் இணைந்துளார்.
- தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர் டிகாக்கை 1 கோடி ரூபாய்க்கு மும்பை அணி ஏலம் எடுத்தது. இலங்கை ஆல்ரவுண்டர் ஹசரங்காவை 2 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி ஏலத்தில் வாங்கியது.
- தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லரை இரண்டு கோடி ரூபாய்க்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது...இந்திய வீரர் பிரித்திவி ஷா, சி.எஸ்.கே. அணிக்காக விளையாடிய டேவன் கான்வே ஆகியோரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை..
- ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வந்த, இலங்கை வீரரான மதிஷா பதிரனாவை, ஐ.பி.எல். மினி ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. கடந்த ஆண்டு ஐ.பி.எல். மெகா ஏலத்தில் 23 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு கே.கே.ஆர். அணிக்கு ஏலம் போன வெங்கடேஷ் ஐயரை, இந்த ஆண்டு ஆர்.சி.பி. அணி 7 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியுள்ளது.
- திருபப்ரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கையால் அமைதி நிலைநாட்டப்பட்டதாக, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தர்கா பாதையை பயன்படுத்தி தீபம் ஏற்றுவதற்கு தனி நீதிபதி உத்தரவிட்டதாக குற்றஞ்சாட்டிய, காவல்துறை தரப்பு, அது நடந்திருந்தால் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டிருக்கும் என்றும் காவல் துறை தரப்பு வாதிட்டுள்ளது.
- மகாத்மா காந்தியின் கருத்துகள் மற்றும் ஏழைகளின் உரிமைகள் மீது பிரதமர் மோடிக்கு வெறுப்பு உள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்...லட்சக்கணக்கான மக்களின் உயிர் நாடியாக உள்ள 100 நாள் வேலைத் திட்டத்தை மத்திய பாஜக அரசு பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
- மேற்கு வங்க விளையாட்டுத் துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்....கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்வில் நடந்த வன்முறைக்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவியில் இருந்து விலகியதாக அவர் தெரிவித்துள்ளார்.