'16 வயதினிலே' பரட்டை முதல் 'எந்திரன்' சிட்டி வரை வில்லத்தனத்தில் வெறித்தனம் காட்டிய ரஜினி

தமிழ் திரையுலகில் 40 ஆண்டுகளாக கோலோச்சி வரும் ரஜினிகாந்துக்குள் மறைந்திருக்கும் வில்லன் நடிப்பு பற்றி அலசுகிறது இந்த தொகுப்பு...

Update: 2019-12-12 05:10 GMT
திரையுலகில் முதன் முதலில் ரஜினிகாந்த் அறிமுகமானது வில்லன் நடிகராகத்தான். ரஜினியின் முதல் படமான அபூர்வராகங்களில் கொடுமைக்கார கணவர் வேடம். 'அவர்கள்', 'மூன்று முடிச்சு' என அடுத்தடுத்த படங்களில் ரஜினியின் வெறித்தனமான வில்லத்தனத்தை ரசித்தனர், தமிழ் ரசிகர்கள்.

மூன்று முடிச்சு படத்தில் தனது ஒருதலைக் காதல் நிறைவேறாமல் போகவே, நண்பனையே கொலை செய்யும் அளவுக்கு துணியும் கதாபாத்திரம், ரஜினிக்கு...

அவரது ஆரம்பகால திரை பிரவேசத்தின்போது, கதாநாயக அந்தஸ்தில் இருந்த கமலுடன் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார், ரஜினி. அத்தனையுமே வில்லன் பாத்திரங்கள் தான். அதில், 16 வயதினிலே பரட்டையை யாராலும் மறக்க முடியாது...
வில்லன் நடிப்பில் அச்சமூட்டிய ரஜினி, மெள்ள மெள்ள சாதுவான பாத்திரத்துக்கு திரும்பினார்.  'புவனா ஒரு கேள்விக்குறி' படத்தில் சிவகுமார் நெகடிவ் பாத்திரத்தில் நடிக்க, நல்லவராக வாழ்ந்திருப்பார், ரஜினி. 

வில்லத்தனத்தில் இருந்து மாறினாலும் ரஜினியின் தோற்றமும் கதாபாத்திரங்களும் முரட்டுத்தனமாகவே சித்தரிக்கப்பட்டன. ரசிகர்களும் அவரை முரட்டுத்தனமான தோற்றத்திலேயே விரும்பினார்கள். அதற்கு உதாரணமாக முள்ளும் மலரும் படத்தை சொல்லலாம்..

அடுத்தடுத்த படங்களில் பதவி உயர்வு பெற்று கதாநாயக அந்தஸ்தை அடைந்தாலும், 'காளி', 'பாயும்புலி' என அதிரடி நாயகனாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு திரை பயணத்தை தொடர்ந்தார், ரஜினி.  1980களின் மத்தியில் ஸாப்ட் கேரக்டர் ஹீரோவாக மாற்றம் பெற்று, தனது ஸ்டைலான நடிப்பால், சூப்பர் ஸ்டாராக உயர்ந்தாலும், வில்லத்தனத்தையும் கரடு முரடான கேரக்டரையும் கைவிடவில்லை

40 ஆண்டுகளை கடந்தாலும், ரஜினியின்  வில்லத்தனமான நடிப்பு இன்னமும் மங்கவில்லை. அதை அவரே நிரூபித்துக் கொண்டும் இருக்கிறார்.

ரஜினி எப்போ கட்சி ஆரம்பிப்பார் என ஒரு குரூப்பும், 'தர்பார்' படம் எப்போ வரும் என ஒரு குரூப்பும் இருந்தாலும், அவருடைய வில்லன் நடிப்புக்காகவே ஒரு ரசிகர் பட்டாளம் இன்னமும் உண்டு என்பதே நிஜம்...



Tags:    

மேலும் செய்திகள்