கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரையுலக பயணம் - நவம்பர் 7,8,9 மூன்று நாட்கள் தொடர் கொண்டாட்டம்

நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகளாக திரையுல பயணத்தை ஒட்டி, வருகிற 7,8,9 ஆகிய மூன்று தேதிகள், தொடர் கொண்டாட்டம் நடைபெறும் என ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது.

Update: 2019-10-31 05:19 GMT
நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகளாக திரையுல பயணத்தை ஒட்டி, வருகிற 7,8,9 ஆகிய மூன்று தேதிகள், தொடர் கொண்டாட்டம் நடைபெறும் என ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் பிறந்த நாளான, நவம்பர் ஏழாம் தேதி, பரமக்குடியில் அவரது தந்தையின் சிலை திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. நவம்பர்  8 ஆம் தேதி, பாலச்சந்தர் சிலை அலுவலகத்தில் திறக்கப்படும் என்றும், 9 ந்தேதி இசைஞானி இளையராஜாவின் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெறும் என்றும், இதில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்