சிவகார்த்திகேயன் 16, குடும்ப படமா?

வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயனின் 16வது படத்தை, இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார்.

Update: 2019-07-14 14:46 GMT
வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயனின் 16வது படத்தை, இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். கார்த்தி, சத்யராஜ் நடித்து கிட்டான கடைக்குட்டி சிங்கம், வெளியாகி ஒரு ஆண்டை கடந்து விட்டது. இந்தப் படம் குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்து சிவகார்த்திகேயனின் 16வது படத்தையும் பாண்டிராஜ் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு இமான் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷும்,  பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்ராஜ்  உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்