"படத்தை மிரட்டும் அளவுக்கு அரசு பலவீனமாக இருக்கிறதா?" - வரலட்சுமி சரத்குமார்

ஒரு திரைப்படத்தை மிரட்டும் அளவுக்கு அரசு பலவீனமாக இருக்கிறதா என நடிகை வரலட்சுமி சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.;

Update: 2018-11-09 10:27 GMT
சர்கார் படத்திற்கு எதிராக பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில் இதுதொடர்பாக வரலட்சுமி சமூக வலைத்தளத்தில் தன் கருத்துகளை பதிவு செய்துள்ளார். அதில், ஒரு திரைப்படத்தை மிரட்டும் அளவுக்கு அரசு பலவீனமாக இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார். பிரச்சினையை சரிசெய்வதற்கு பதிலாக அதை மோசமாக்கும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளதாக வரலட்சுமி குற்றச்சாட்டு முன்வைத்தார். ஒரு படைப்பை உருவாக்க முழு சுதந்திரம் உள்ளதாகவும், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸூக்கு தனது ஆதரவை தெரிவிப்பதாகவும் வரலட்சுமி தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்