பிரபல குணச்சித்திர நடிகர் கேப்டன் ராஜூ மரணம்

கேரளாவைச் சேர்ந்த பிரபல குணச்சித்திர நடிகர் கேப்டன் ராஜூ காலமானார், அவருக்கு வயது 68.

Update: 2018-09-17 07:46 GMT
கேரளாவைச் சேர்ந்த பிரபல குணச்சித்திர நடிகர் கேப்டன் ராஜூ காலமானார். அவருக்கு வயது 68. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் கேப்டன் ராஜூ நடித்துள்ளார். தமிழில் ரஜினியுடன் 'தர்மத்தின் தலைவன்', கமலுடன் சூரசம்ஹாரம், சத்யராஜூடன் கடமை கண்ணியம் கட்டுப்பாடு, சின்னப்பதாஸ், ஜல்லிக்கட்டு, மற்றும் சேவகன், உள்ளே வெளியே , பிரியங்கா உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருக்கிறார். 1980, 90-களில் வில்லன் கதாபாத்திரங்களில் மிரட்டிய கேப்டன் ராஜூ, ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றியவர். சினிமா மீது இருந்த ஆர்வத்தால், பணியை ராஜினாமா செய்து விட்டு நடித்து வந்தார். கடந்த ஜூன் மாதம், விமானத்தில் சென்றபோது நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் கொச்சியில் இன்று காலமானார். கேப்டன் ராஜூ மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்