சாயாஜி ஷிண்டேயின் வித்தியாசமான நடிப்பில் "அகோரி"

சாயாஜி ஷிண்டேயின் வித்தியாசமான நடிப்பில் தயாராகி வரும் அகோரி திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;

Update: 2018-07-06 04:32 GMT
ஆர்.பி.பிலிம்ஸ் நிறுவனம் சுரேஷ் மேனனுடன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் பி.எஸ்.ராஜ்குமார் இயக்குகிறார். சிவனடியாராக உள்ள அகோரிக்கும் மற்றும் தீய சக்திகளுக்கும் இடையே நடக்கும் போராட்டமே கதை என்றும், இது அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கேரள மாநிலத்தில் பிரமாண்ட செட் போட்டு, 200 அகோரிகள் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், இறுதிக்கட்ட காட்சிகள் சென்னை பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு உள்ளது. வித்தியாசமான நடிப்பில் சாயாஜி ஷிண்டே நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ராமகிருஷ்ணா நடிக்கிறார். தெலுங்கில் சஹா படத்தின் மூலம் புகழ்பெற்ற சகுல்லா மதுபாபு வில்லனாக இந்த படத்தில் அறிமுகமாகிறார்.இதில் இடம் பெற்றுள்ள ஒருமணி கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்து தரப்பினரையும் மிரளவைக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தயாரிப்பாளர் பாலா வசனத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்