வசூலை குவிக்கும் 'ஜூராசிக் வேர்ல்ட்'
ஆயிரத்து 15 கோடிகளை வசூல் செய்து ஜுராசிக் வேர்ல்ட் ஃபாலன் தொடர்ந்து முதலிடம்;
ஹாலிவுட் படங்களின், இந்த வார பாக்ஸ் ஆபிசில், ஆயிரத்து 15 கோடிகளை வசூல் செய்துள்ள ஜுராசிக் வேர்ல்ட் ஃபாலன் கிங்டம் திரைப்படம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் அனிமேஷன் படமான incredibles 2 உள்ளது.
இந்த வார முடிவில் இந்த படம் 322 கோடிகளை வசூல் செய்துள்ளது. அடுத்த இரு இடங்களில் "Sicario: Day of the Soldado" மற்றும் "Uncle Drew" படங்கள் 109 கோடியும் ,96 கோடியும் வசூல் செய்துள்ளன. ஐந்தாவது இடத்தில், 54 கோடிகளை வசூல் செய்துள்ள oceans 8 திரைப்படம் உள்ளது.