ஷாங்காய் திரைப்பட விழா : உலக அரங்கில் சாதனை படைக்கும் "பேரன்பு"

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில், தமிழ்த் திரைப்படம் 'பேரன்பு' இடம்பெற்றுள்ளது.

Update: 2018-06-20 14:31 GMT
சீனாவில் கடந்த 21 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் இத்திரைப்பட விழாவில் இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 6 படங்கள் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் தேர்வான ஒரே தென்னிந்திய திரைப்படம், "பேரன்பு" தமிழ் படமாகும்.  ராம் இயக்கத்தில் P.L.தேனப்பன் தயாரித்துள்ள இந்த படத்தில் மம்மூட்டி, 'தங்க மீன்கள்' சாதனா, அஞ்சலி, அமீர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.   

சீனாவின் ஷாங்காயில் முதல் காட்சியாக Asian premiere என்ற பிரிவில் கடந்த 16ம் தேதி இந்த படம திரையிடப்பட்டது. 17ம் தேதி பார்வையாளர்களுடன் கலந்துரையாடல் என்ற நிகழ்ச்சியின் கீழ் மீண்டும் திரையிடப்பட்டது. மம்முட்டியின் நடிப்பை, உலகத்தரத்தில் ஆன நடிப்பு என சீன திரைப்பட விமர்சகர்கள் பாராட்டினர். தங்கமீன்களில் செல்லம்மாவாக நடித்த சாதனா இத்திரைப்படத்தில் "பாப்பா" என்ற கதாபாத்திரத்தில் மொத்த பார்வையாளர்களையும் தமது வசப்படுத்தினார். 
Tags:    

மேலும் செய்திகள்