"காடுகள், வயல்கள் அழிவது அபாயம் அல்லவா?" - 8 வழிச்சாலை குறித்து நடிகர் விவேக் கருத்து
"காடுகள், வயல்கள் அழிவது அபாயம் அல்லவா?" - 8 வழிச்சாலை குறித்து நடிகர் விவேக் கருத்து
சேலம் 8 வழி சாலை அமைக்கும் விஷயத்தில் பிரேசில் நாட்டைப் போல மாற்று ஏற்பாட்டில் பாலம் அமைக்க வேண்டும் என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தேசத்திற்கு கட்டுமானம் முக்கியம் தான், ஆனால் காடுகள், வயல்கள் அழிவது மக்களுக்கும் விவசாயத்துக்கும் பெரும் அபாயம் அல்லவா? என கேள்வி எழுப்பியுள்ளார். பிரேசில் நாட்டைப் போல் மாற்று ஏற்பாட்டில் இதனை செயல்படுத்த முடியுமா என பொறியியல் வல்லுநர் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசக்கட்டுமானம் முக்கியம் தான். ஆனால் காடுகள்,வயல்கள் அழிவது மக்களுக்கும் விவசாயத்துக்கும் பெரும் அபாயம் அல்லவா? பிரேசில் போல் மாற்று ஏற்பாட்டில் பாலமாக போட இயலுமா? பொறியியல் வல்லுனர்கள் சிந்திக்க வேண்டுகிறேன். pic.twitter.com/MXTQpFZ6fn
— Vivekh actor (@Actor_Vivek) June 20, 2018